Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:172 — இம்ரானின் குடும்பத்தினர்

அடிக்கடி துன்புறுத்தலுக்குள்ளாகி கஷ்டப்பட்ட போதும், கடவுள்-க்கும், தூதருக்கும் பதிலளித்து, தங்களுடைய நற்செயல்களைத் தொடர்ந்து செய்து, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, ஒரு மகத்தான வெகுமதி உள்ளது.

[3:171] அவர்கள் கடவுள்-உடைய அருட்கொடைகளையும், மற்றும் அருளையும் மேலும் கடவுள் நம்பிக்கை யாளர்களுக்கு வெகுமதியளிக்க ஒருபோதும் தவறுவதில்லை என்ற நற்செய்தியையும் வைத்திருக்கின்றார்கள்.

[3:173] “உங்களுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு விட்டனர், நீங்கள் அவர்களுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும்”, என மக்கள் அவர்களிடத்தில் கூறும்போது, இது அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவே செய்கின்றது, மேலும் அவர்கள் , “கடவுள் எங்களுக்கு போதுமானவர், அவரே மிகச் சிறந்த பாதுகாவலர்” என்று கூறுகின்றார்கள்.