குர்ஆன் 3:173 — இம்ரானின் குடும்பத்தினர்
“உங்களுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு விட்டனர், நீங்கள் அவர்களுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும்”, என மக்கள் அவர்களிடத்தில் கூறும்போது, இது அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவே செய்கின்றது, மேலும் அவர்கள் , “கடவுள் எங்களுக்கு போதுமானவர், அவரே மிகச் சிறந்த பாதுகாவலர்” என்று கூறுகின்றார்கள்.
[3:172] அடிக்கடி துன்புறுத்தலுக்குள்ளாகி கஷ்டப்பட்ட போதும், கடவுள்-க்கும், தூதருக்கும் பதிலளித்து, தங்களுடைய நற்செயல்களைத் தொடர்ந்து செய்து, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, ஒரு மகத்தான வெகுமதி உள்ளது.
[3:174] கடவுள்-ன் அருட்கொடைகளுக்கும் மற்றும் அருளுக்கும் அவர்கள் தகுதியடைந்து விட்டார்கள். கடவுள்-ன் அங்கீகாரத்தை அவர்கள் அடைந்து விட்ட படியால், அவர்களை எந்தத் தீங்கும் எப்பொழுதும் தீண்டாது. கடவுள் அளவில்லாத அருளை உடையவர்.