குர்ஆன் 3:174 — இம்ரானின் குடும்பத்தினர்
கடவுள்-ன் அருட்கொடைகளுக்கும் மற்றும் அருளுக்கும் அவர்கள் தகுதியடைந்து விட்டார்கள். கடவுள்-ன் அங்கீகாரத்தை அவர்கள் அடைந்து விட்ட படியால், அவர்களை எந்தத் தீங்கும் எப்பொழுதும் தீண்டாது. கடவுள் அளவில்லாத அருளை உடையவர்.
[3:173] “உங்களுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு விட்டனர், நீங்கள் அவர்களுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும்”, என மக்கள் அவர்களிடத்தில் கூறும்போது, இது அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவே செய்கின்றது, மேலும் அவர்கள் , “கடவுள் எங்களுக்கு போதுமானவர், அவரே மிகச் சிறந்த பாதுகாவலர்” என்று கூறுகின்றார்கள்.
[3:175] அவனுக்கு கீழ்ப்படிந்தவர்களிடத்தில் பயத்தை ஏற்படுத்துவது சாத்தானின் வழிமுறை ஆகும். அவர்களுக்கு அஞ்சாதீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் எனக்கே அஞ்சுங்கள்.