குர்ஆன் 3:175 — இம்ரானின் குடும்பத்தினர்
அவனுக்கு கீழ்ப்படிந்தவர்களிடத்தில் பயத்தை ஏற்படுத்துவது சாத்தானின் வழிமுறை ஆகும். அவர்களுக்கு அஞ்சாதீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் எனக்கே அஞ்சுங்கள்.
[3:174] கடவுள்-ன் அருட்கொடைகளுக்கும் மற்றும் அருளுக்கும் அவர்கள் தகுதியடைந்து விட்டார்கள். கடவுள்-ன் அங்கீகாரத்தை அவர்கள் அடைந்து விட்ட படியால், அவர்களை எந்தத் தீங்கும் எப்பொழுதும் தீண்டாது. கடவுள் அளவில்லாத அருளை உடையவர்.
[3:176] நம்ப மறுப்பதின் பால் விரைந்து செல்பவர்களால் துக்கமடைந்துவிடாதீர். அவர்கள் ஒரு போதும் சிறிதளவும் கடவுள்-க்கு தீங்கிழைக்க இயலாது. அதற்கு பதிலாக, அவர்களுக்கு மறுவுலகில் எந்தப்பங்கும் இருக்கக்கூடாது என கடவுள் நாடிவிட்டார். அவர்கள் ஒரு கடுமையான தண்டனைக்குள்ளாகி விட்டனர்.