Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:18 — இம்ரானின் குடும்பத்தினர்

தன்னைத் தவிர வேறுதெய்வம் இல்லை, என்று கடவுள் சாட்சி அளிக்கின்றார், வானவர்களும், அறிவுடையவர்களும், அவ்வாறே செய்கின்றனர். உண்மையாகவும் மேலும் நீதமாகவும், அவரே பரிபூரணமான தெய்வம் ஆவார்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை, சர்வ வல்லமையுடை யவர், ஞானம் மிக்கவர்.

[3:17] அவர்கள் உறுதியானவர்கள், உண்மை யாளர்கள், அடிபணிந்தவர்கள், பெருந்தன்மை யாளர்கள், இன்னும் அதிகாலையில் தியானிப் பவர்கள்.

[3:19] கடவுள்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் “அடிபணிதல்” ஆகும். அதற்கு நேர்மாற்றமாக வேதத்தைப் பெற்றவர்களோ தாங்கள் அறிவைப் பெற்றிருந்த போதிலும், பொறாமை காரணமாக இவ்வுண்மையை மறுக்கின்றனர். கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கும் இத்தகையவர்களை கணக்கிடுவதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.