குர்ஆன் 3:23 — இம்ரானின் குடும்பத்தினர்
கடவுள்-ன் இவ்வேதத்தை ஆதரிக்கவும் மேலும் அவர்களின் சொந்த வாழ்வுகளில் இதனைப் பிரயோகிக்கவும் வேதத்தின் பகுதி கொடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்படு கின்றனர் என்பதையும், அப்போது அவர்களில் சிலர் வெறுப்பினால் திரும்பி விடுவதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?`
[3:22] இந்த வாழ்வு மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டிலும் அவர்களின் செயல்கள் பயனற்றதாக ஆக்கப்பட்டுவிட்டன, மேலும் அவர்கள் எந்த உதவியாளரையும் பெற மாட்டர்கள்.
[3:24] இது ஏனெனில், அவர்கள், “ஒரு சில நாட்கள் தவிர நரக நெருப்பு எங்களை தீண்டாது”, என்று கூறியதே. இவ்விதமாக அவர்கள் தங்களின் மார்க்கத்தில் தங்களுடைய சொந்தக் கற்பனைகளால் ஏமாற்றப்பட்டனர்.