குர்ஆன் 3:46 — இம்ரானின் குடும்பத்தினர்
“தொட்டிலிலும், அதேபோல் வாலிபத்திலும் அவர் மக்களிடம் பேசுவார்; அவர் நன்னெறி யாளர்களில் ஒருவராக இருப்பார்.”
[3:45] வானவர்கள் கூறினர், “மேரியே, கடவுள் உமக்கு நற்செய்தி தருகின்றார்: அவரிட மிருந்துள்ள ஒரு வார்த்தையாக, அவரின் பெயர் ‘மெசையாஹ், மேரியின் மகன் இயேசு’. அவர் இந்த வாழ்விலும், மறுவுலகிலும் பிரசித்தி பெற்றவராக, இன்னும் எனக்கு நெருக்க மானவர்களில் ஒருவராக இருப்பார்.
[3:47] அவர், “என் இரட்சகரே, எந்த மனிதரும் என்னைத் தொடாதிருக்கும் போது எவ்வாறு நான் ஒருமகனைப் பெறுவேன்?” என்று கூறினார். அவர் கூறினார், “இவ்விதமாக கடவுள் தான் நாடுகின்றதை படைக்கின்றார். எதையேனும் நிகழ்த்த வேண்டுமாயின், அவர் அதன்பால் கூறுவதெல்லாம், ‘ஆகு’ என்பதே, உடன் அது ஆகிவிடுகின்றது.