குர்ஆன் 3:65 — இம்ரானின் குடும்பத்தினர்
வேதத்தைப் பின்பற்றுவோரே, ஆப்ரஹாமிற்குப் பின்னரேயன்றி தோராவும் சுவிசேஷமும் வெளிப்படுத்தப்படவில்லை எனும் போது, அவரைப்பற்றி நீங்கள் ஏன் தர்க்கிக்கின்றீர்கள்? நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[3:64] “வேதத்தைப் பின்பற்றுவோரே, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே அறிவுப் பூர்வமான தொரு ஒப்பந்தத்திற்கு நாம் வருவோம். அது கடவுள் -ஐ அன்றி நாம் வழிபடமாட்டோம்; அதாவது அவருடன் வேறு எந்த இணைத்தெய்வங்களையும் நாம் ஒரு போதும் அமைத்துக் கொள்ளமாட்டோம், அன்றியும் , கடவுள்-உடன் எந்த மனிதர்களையும் இரட்சகர்களாக அமைத்துக் கொள்ள மாட்டோம்” என்று கூறுவீராக அவர்கள் திரும்பிவிட்டால், “நாங்
[3:66] உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் பற்றி நீங்கள் விவாதித்தீர்கள்; உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி நீங்கள் ஏன் விவாதிக்கின்றீர்கள்? நீங்கள் அறியமாட்டீர்கள் அதே சமயம், கடவுள் அறிகின்றார்.