Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:78 — இம்ரானின் குடும்பத்தினர்

வேதத்தில் இல்லாத போதும், அது வேதத்தில் உள்ளதுதான் என்று நீங்கள் எண்ணும் பொருட்டு, வேதத்தைப் போன்று தோற்ற மளிக்க தங்கள் நாவுகளைச் சுழற்றுபவர்கள் அவர்களில் உள்ளனர். மேலும் அது கடவுள்-இடமிருந்து இல்லாத போதே அது கடவுள் -இடமிருந்து உள்ளதுதான் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இவ்விதமாக அவர்கள் தெரிந்து கொண்டே, பொய்களைக் கூறி அவற்றைக் கடவுள் மேல் கற்பிக்கின்றார்கள்.

[3:77] கடவுள்-ன் உடன்படிக்கையை மேலும் தங்கள் கடமைகளை, ஒருமலிவான விலைக்கு வியாபாரம் செய்பவர்களை பொறுத்தவரை, மறுவுலகில் அவர்கள் எந்தப் பங்கையும் பெற மாட்டார்கள், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் கடவுள் அவர்களுடன் பேசவும் மாட்டார், அன்றி அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டார், அன்றி அவர் அவர்களைத் தூய்மையாக்கவும் மாட்டார். அவர்கள் வலி மிகுந்ததொரு தண்டனைக்கு உள்ள

[3:79] மக்களிடம் “கடவுள்-உடன் என்னையும் வழிபடுங்கள்” என்று வேதத்தையும் அதன் தூதுத்துவத்தையும் கொண்டு கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட ஒரு மனிதர் ஒரு போதும் கூற மாட்டார். அதற்குப் பதிலாக, நீங்கள், போதனை செய்யும் வேதம் மற்றும் நீங்கள் கற்றுக் கொள்ளும் படிப்பினைகளுக்கு இணங்க, “உங்கள் இரட்சகருக்கு மட்டுமே முற்றிலுமாக உங்களை அர்ப்பணியுங்கள்” (என்றே அவர் கூறுவார்).