Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:79 — இம்ரானின் குடும்பத்தினர்

மக்களிடம் “கடவுள்-உடன் என்னையும் வழிபடுங்கள்” என்று வேதத்தையும் அதன் தூதுத்துவத்தையும் கொண்டு கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட ஒரு மனிதர் ஒரு போதும் கூற மாட்டார். அதற்குப் பதிலாக, நீங்கள், போதனை செய்யும் வேதம் மற்றும் நீங்கள் கற்றுக் கொள்ளும் படிப்பினைகளுக்கு இணங்க, “உங்கள் இரட்சகருக்கு மட்டுமே முற்றிலுமாக உங்களை அர்ப்பணியுங்கள்” (என்றே அவர் கூறுவார்).

[3:78] வேதத்தில் இல்லாத போதும், அது வேதத்தில் உள்ளதுதான் என்று நீங்கள் எண்ணும் பொருட்டு, வேதத்தைப் போன்று தோற்ற மளிக்க தங்கள் நாவுகளைச் சுழற்றுபவர்கள் அவர்களில் உள்ளனர். மேலும் அது கடவுள்-இடமிருந்து இல்லாத போதே அது கடவுள் -இடமிருந்து உள்ளதுதான் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இவ்விதமாக அவர்கள் தெரிந்து கொண்டே, பொய்களைக் கூறி அவற்றைக் கடவுள் மேல் கற்பிக்கின்றார்கள்.

[3:80] அன்றி வானவர்களையும், வேதம் வழங்கப்பட்ட வர்களையும் இரட்சகர்களாக வழிபாடு செய்யும்படி உங்களிடம் அவர் கட்டளையிடமாட்டார். அடிபணிந்தவர்களாக ஆன பின்னர் நம்பமறுக் கும்படி அவர் உங்களுக்கு உபதேசிப்பாரா?