குர்ஆன் 3:80 — இம்ரானின் குடும்பத்தினர்
அன்றி வானவர்களையும், வேதம் வழங்கப்பட்ட வர்களையும் இரட்சகர்களாக வழிபாடு செய்யும்படி உங்களிடம் அவர் கட்டளையிடமாட்டார். அடிபணிந்தவர்களாக ஆன பின்னர் நம்பமறுக் கும்படி அவர் உங்களுக்கு உபதேசிப்பாரா?
[3:79] மக்களிடம் “கடவுள்-உடன் என்னையும் வழிபடுங்கள்” என்று வேதத்தையும் அதன் தூதுத்துவத்தையும் கொண்டு கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட ஒரு மனிதர் ஒரு போதும் கூற மாட்டார். அதற்குப் பதிலாக, நீங்கள், போதனை செய்யும் வேதம் மற்றும் நீங்கள் கற்றுக் கொள்ளும் படிப்பினைகளுக்கு இணங்க, “உங்கள் இரட்சகருக்கு மட்டுமே முற்றிலுமாக உங்களை அர்ப்பணியுங்கள்” (என்றே அவர் கூறுவார்).
[3:81] கடவுள் வேதம் வழங்கப்பட்டவர்களிடம், “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுப்பேன். அதன் பின்னர் இருக்கக் கூடிய எல்லா வேதங்களையும் உறுதிப்படுத்த ஒரு தூதர் வருவார். அவரை நீங்கள் நம்ப வேண்டும், இன்னும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறியவராக ஒரு உடன் படிக்கை எடுத்தார். “இதை நீங்கள் ஒப்புக் கொள் கின்றீர்களா மேலும் இந்த உடன்படிக்கையை நிறைவேற்ற உறுதி அளிக்கின்