குர்ஆன் 3:91 — இம்ரானின் குடும்பத்தினர்
எவர்கள் நம்பமறுத்து, மேலும் நம்ப மறுத்தவர் களாகவே மரணித்து விடுகின்றார்களோ அவர் களால் ஒரு பூமியளவு தங்கத்தை ஈட்டுத் தொகையாக தர முடிந்தாலும் அவர்கள் எவரிட மிருந்தும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் வலிமிக்க தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள். அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.
[3:90] நம்பிக்கை கொண்டபின்னர், நம்பமறுத்து அதன் பின்னர், நம்பிக்கையின்மையில் ஆழமாக மூழ்கியவர்களுக்கு அவர்களுடைய, வருந்தித்திருந்துதல் அவர்களிடமிருந்து, ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, அவர்கள்தான் மெய்யாகவே வழிதவறியவர்கள்.
[3:92] உங்களுக்கு பிரியமானவற்றிலிருந்து நீங்கள் தர்மம் வழங்காத வரை நீங்கள் நன்னெறியினை அடைய இயலாது. தர்மமாக எதை நீங்கள் வழங்கினாலும், கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.