Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:92 — இம்ரானின் குடும்பத்தினர்

உங்களுக்கு பிரியமானவற்றிலிருந்து நீங்கள் தர்மம் வழங்காத வரை நீங்கள் நன்னெறியினை அடைய இயலாது. தர்மமாக எதை நீங்கள் வழங்கினாலும், கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[3:91] எவர்கள் நம்பமறுத்து, மேலும் நம்ப மறுத்தவர் களாகவே மரணித்து விடுகின்றார்களோ அவர் களால் ஒரு பூமியளவு தங்கத்தை ஈட்டுத் தொகையாக தர முடிந்தாலும் அவர்கள் எவரிட மிருந்தும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் வலிமிக்க தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள். அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.

[3:93] தோரா வழங்கப்படுவதற்கு முன்பு இஸ்ரவேலர்கள் தங்கள் மீது சில குறிப்பிட்ட தடைகளைச் சுமத்திக்கொள்ளும்வரை, எல்லா உணவுகளும் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால்,தோராவைக் கொண்டு வந்து அதனை வாசியுங்கள்,” என்று கூறுவீராக.