Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:93 — இம்ரானின் குடும்பத்தினர்

தோரா வழங்கப்படுவதற்கு முன்பு இஸ்ரவேலர்கள் தங்கள் மீது சில குறிப்பிட்ட தடைகளைச் சுமத்திக்கொள்ளும்வரை, எல்லா உணவுகளும் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால்,தோராவைக் கொண்டு வந்து அதனை வாசியுங்கள்,” என்று கூறுவீராக.

[3:92] உங்களுக்கு பிரியமானவற்றிலிருந்து நீங்கள் தர்மம் வழங்காத வரை நீங்கள் நன்னெறியினை அடைய இயலாது. தர்மமாக எதை நீங்கள் வழங்கினாலும், கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[3:94] இதன் பிறகும் எவர்கள் பொய்யான தடைகளை கற்பனை செய்து இன்னும் அவற்றைக் கடவுள் மீது இட்டுக்கட்டுகின்றார்களோ அவர் கள் தான் உண்மையில் தீயவர்கள்.