குர்ஆன் 3:96 — இம்ரானின் குடும்பத்தினர்
மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மிக முக்கிய மான புண்ணிய ஸ்தலம் ஒன்று பெக்காவில் உள்ளது; மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட ஒரு வழிகாட்டி.
[3:95] “கடவுள் சத்தியத்தை பிரகடனம் செய்து விட்டார்: நீங்கள் ஆப்ரஹாமின் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் - ஏகத்துவம். அவர் ஒரு போதும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருந்த தில்லை” என்று கூறுவீராக.
[3:97] அதில் தெளிவான அடையாளங்கள் உள்ளன, அது ஆப்ரஹாமின் இடமாகும். அதில் நுழையும் எவரொருவருக்கும் பாதுகாப்பான வழி வழங்கப்பட வேண்டும். மக்கள் தங்களால் இயலும்போது இந்த புனிதமான இடத்திற்கு, ஹஜ்ஜைக் கடைபிடிப்பது கடவுள்-க்கு செய்ய வேண்டிய கடமை ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, கடவுள்-க்கு எவருடைய தேவையும் இல்லை.