Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:10 — ரோமானியர்கள்

தீமைகள் புரிந்தவர்களுக்குரிய பின் விளைவு கள் தீயவையாகவே இருந்திருத்தல் வேண்டும். இது ஏனெனில் அவர்கள் கடவுள்-ன் வெளிப் பாடுகளை ஏற்க மறுத்தனர், மேலும் அவற்றைக் கேலி செய்தனர்.

[30:9] பூமியில் சுற்றித் திரிந்து, தங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நேர்ந்த விளைவு களை அவர்கள் கவனித்துப் பார்க்க வில்லையா? அவர்கள் மிகவும் வலிமை நிறைந்தவர்களாகவும் மிகவும் வளமானவர் களாகவும், மேலும் பூமியின் மீது அதிகம் உற்பத்தி செய்யக்கூடியவர்களாகவும் இருந் தனர். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் சென்றனர். அதன் விளைவாக, அவர்களுக்கு அநீதி யிழைத்தது கடவுள் அல்ல, அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதியிழைத்துக் கொண்டனர்.

[30:11] கடவுள் தான் படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். இறுதியாக, அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.