Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 31:17 — லுக்மான்

“என் மகனே, நீ தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். நீ நன்னெறியை ஆதரிப்பதுடன் மேலும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும், மேலும் இன்னல்களை எதிர் கொள்ளும்போது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். இவை மிகவும் கண்ணியமான பண்புகளாகும்.

[31:16] “என் மகனே, ஒரு பாறையின் ஆழத்தினுள் உள்ள, ஒரு கடுகின் வித்தளவு மிகச் சிறியதான ஒன்றாக இருந்தாலும், அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும், கடவுள் அதனைக் கொண்டு வருவார் என்பதை அறிந்து கொள். கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.

[31:18] “நீ மக்களை ஆணவத்துடன் நடத்த வேண்டாம், அன்றி பெருமையாக பூமியில் சுற்றித் திரியவும் வேண்டாம். தற்பெருமையாக காட்டிக்கொள்பவர் களைக் கடவுள் நேசிப்பதில்லை.