குர்ஆன் 31:20 — லுக்மான்
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்களுக்குப் பணி செய்வதற் காகக் கடவுள் ஆக்கியிருக்கின்றார் என்பதையும், மேலும் தன் அருட்கொடைகளை வெளிப் படையானதாகவும் மற்றும் மறைவானதாகவும் - உங்கள் மீது பொழிந்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இருப்பினும், சில மனிதர்கள் அறிவில்லாமலும், வழிகாட்டல் இல்லாமலும், மேலும் தெளிவாக விளக்குகின்ற வேதமில்லாமலும் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக் கின்றனர்.
[31:19] “பணிவாக நட, மேலும் உனது குரலைத் தாழ்த்திக் கொள்-குரல்களிலேயே அருவருப்பானது கழுதையின் குரலே ஆகும்”.
[31:21] “கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளைப் பின்பற்றுங்கள்”, என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “அல்ல, எங்கள் பெற்றோர்கள் எதனைச் செய்ய நாங்கள் கண்டோமோ அதனை மட்டுமே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறுகின்றார் கள். சாத்தான் அவர்களை நரக வேதனையின் பால் வழிநடத்தினாலுமா?