Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 31:21 — லுக்மான்

“கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளைப் பின்பற்றுங்கள்”, என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “அல்ல, எங்கள் பெற்றோர்கள் எதனைச் செய்ய நாங்கள் கண்டோமோ அதனை மட்டுமே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறுகின்றார் கள். சாத்தான் அவர்களை நரக வேதனையின் பால் வழிநடத்தினாலுமா?

[31:20] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்களுக்குப் பணி செய்வதற் காகக் கடவுள் ஆக்கியிருக்கின்றார் என்பதையும், மேலும் தன் அருட்கொடைகளை வெளிப் படையானதாகவும் மற்றும் மறைவானதாகவும் - உங்கள் மீது பொழிந்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இருப்பினும், சில மனிதர்கள் அறிவில்லாமலும், வழிகாட்டல் இல்லாமலும், மேலும் தெளிவாக விளக்குகின்ற வேதமில்லாமலும் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக் கின்றனர்.

[31:22] கடவுள்-க்கு முழுமையாக அடிபணிந்து, அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர், மிகவும் உறுதியானதொரு பிடிமானத்தைப் பற்றிக் கொண்டு விட்டனர். ஏனெனில் கடவுள் அனைத்து விஷயங்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.