Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 31:22 — லுக்மான்

கடவுள்-க்கு முழுமையாக அடிபணிந்து, அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர், மிகவும் உறுதியானதொரு பிடிமானத்தைப் பற்றிக் கொண்டு விட்டனர். ஏனெனில் கடவுள் அனைத்து விஷயங்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

[31:21] “கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளைப் பின்பற்றுங்கள்”, என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “அல்ல, எங்கள் பெற்றோர்கள் எதனைச் செய்ய நாங்கள் கண்டோமோ அதனை மட்டுமே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறுகின்றார் கள். சாத்தான் அவர்களை நரக வேதனையின் பால் வழிநடத்தினாலுமா?

[31:23] நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர் களுடைய நம்பிக்கையின்மையினால் கவலை க்குள்ளாகாதீர். அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம்மிடமே உள்ளது, பின்னர் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப்பற்றியும் நாம் அவர்களுக்கு அறிவிப்போம். ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.