குர்ஆன் 31:23 — லுக்மான்
நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர் களுடைய நம்பிக்கையின்மையினால் கவலை க்குள்ளாகாதீர். அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம்மிடமே உள்ளது, பின்னர் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப்பற்றியும் நாம் அவர்களுக்கு அறிவிப்போம். ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[31:22] கடவுள்-க்கு முழுமையாக அடிபணிந்து, அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர், மிகவும் உறுதியானதொரு பிடிமானத்தைப் பற்றிக் கொண்டு விட்டனர். ஏனெனில் கடவுள் அனைத்து விஷயங்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
[31:24] நாம் அவர்களைத் தற்காலிகமாகச் சுகமனுப விக்க விடுகின்றோம், பின்னர் அவர்களைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவோம்.