குர்ஆன் 32:10 — சிர வணக்கம்
அவர்கள், “பூமிக்குள் நாம் மறைந்துவிட்ட பிறகு, மீண்டும் புதிதாக நாம் படைக்கப்படுவோமா?” என்று வியக்கின்றார்கள். இவ்விதமாக, தங்களுடைய இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து, அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.
[32:9] அவர் அவனை உருவமைத்தார், மேலும் தன்னு டைய ஆவியிலிருந்து அவனுக்குள் ஊதினார். மேலும் அவர் உங்களுக்கு செவிப்புலன், பார்வை, மற்றும் மூளைகளைக் கொடுத்தார்; அரிதாகவே நீங்கள், நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்கள்.
[32:11] “உங்களுக்கெனப் பொறுப்பேற்றுள்ள அந்த வானவரால் நீங்கள் மரணத்தில் ஆழ்த்தப் படுவீர்கள், பின்னர் உங்கள் இரட்சகரிடமே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்,”என்று கூறுவீராக.