குர்ஆன் 32:9 — சிர வணக்கம்
அவர் அவனை உருவமைத்தார், மேலும் தன்னு டைய ஆவியிலிருந்து அவனுக்குள் ஊதினார். மேலும் அவர் உங்களுக்கு செவிப்புலன், பார்வை, மற்றும் மூளைகளைக் கொடுத்தார்; அரிதாகவே நீங்கள், நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்கள்.
[32:8] பின்னர், குறிப்பிடப்பட்டதொரு தாழ்ந்த திரவத் தின் மூலமாக அவனுடைய இனவிருத்தியை அவர் தொடர்ந்தார்.
[32:10] அவர்கள், “பூமிக்குள் நாம் மறைந்துவிட்ட பிறகு, மீண்டும் புதிதாக நாம் படைக்கப்படுவோமா?” என்று வியக்கின்றார்கள். இவ்விதமாக, தங்களுடைய இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து, அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.