குர்ஆன் 32:19 — சிர வணக்கம்
நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நிரந்தரமான சுவனத்திற்குத் தகுதி பெற்று விட்டனர். அவர்களுடைய காரியங்களுக்குப் பிரதிபலனாக, அவர்களுடைய தங்குமிடம் இத்தகையதேயாகும்.
[32:18] ஒரு நம்பிக்கையாளராக இருக்கும் ஒருவர் தீயவராக இருக்கும் ஒருவருக்குச் சமமாவாரா? அவர்கள் சமமானவர்கள் அல்ல.
[32:20] தீயவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய விதி நரகமேயாகும். அதிலிருந்து வெளியேற அவர்கள் முயல்கின்ற ஒவ்வொரு முறையும், திரும்புவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப் படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் நம்ப மறுத்துக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.