குர்ஆன் 32:20 — சிர வணக்கம்
தீயவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய விதி நரகமேயாகும். அதிலிருந்து வெளியேற அவர்கள் முயல்கின்ற ஒவ்வொரு முறையும், திரும்புவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப் படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் நம்ப மறுத்துக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.
[32:19] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நிரந்தரமான சுவனத்திற்குத் தகுதி பெற்று விட்டனர். அவர்களுடைய காரியங்களுக்குப் பிரதிபலனாக, அவர்களுடைய தங்குமிடம் இத்தகையதேயாகும்.
[32:21] (மறுஉலகின்) மாபெரும் தண்டனைக்கு அவர்கள் உள்ளாவதற்கு முன்னர், அவர்கள் (குறிப்பறிந்து கொண்டு) சீர்திருந்தும் பொருட்டு, (இவ்வுலகின்) சிறிய தண்டனையை அவர்கள் சுவைக்கும்படி நாம் செய்வோம்.