குர்ஆன் 32:22 — சிர வணக்கம்
தன்னுடைய இரட்சகரின் இந்த வெளிப்பாடுகளால் நினைவூட்டப்பட்டும், அதன் பின்னர் அவற்றைப் புறக்கணிப்பதை வலியுறுத்தும் ஒருவனைவிட மிகத் தீயவன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளைத் தண்டிப் போம்.
[32:21] (மறுஉலகின்) மாபெரும் தண்டனைக்கு அவர்கள் உள்ளாவதற்கு முன்னர், அவர்கள் (குறிப்பறிந்து கொண்டு) சீர்திருந்தும் பொருட்டு, (இவ்வுலகின்) சிறிய தண்டனையை அவர்கள் சுவைக்கும்படி நாம் செய்வோம்.
[32:23] மோஸஸிற்கு நாம் வேதத்தைத் தந்தோம் - அவரைச் சந்திப்பதைப் பற்றி எந்த ஐயமும் கொள்ளாதீர் -மேலும் இஸ்ரவேலின் சந்ததி யினருக்கு ஒரு வழிகாட்டியாக அதனை நாம் ஆக்கினோம்.