குர்ஆன் 32:4 — சிர வணக்கம்
கடவுள் தான் வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஆறு நாட்களில் படைத்து பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டவர். அவருடன் உங்களுக்கு இரட்சக ராக எவரும் இல்லை, அன்றி ஒரு பரிந்துரைப் பவரும் உங்களுக்கு இல்லை. நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?
[32:3] அவர்கள், “அவர் இதனை இட்டுக் கட்டிக் கொண்டார்” என்று கூறினார்கள். உண்மையில் இது, உமக்கு முன்னர் ஓர் எச்சரிப்பவரை ஒரு போதும் பெற்றிருக்காத மக்களை, அவர்கள் வழி காட்டப்பட்டவர்களாக இருக்கும் பொருட்டு, எச்சரிக்கை செய்வதற்காக உம் இரட்சகரிட மிருந்துள்ள சத்தியமாகும்.
[32:5] வானங்கள் முதல் பூமி வரை அனைத்து விஷயங்களும் அவரால் கட்டுப்படுத்தப் படுகின்றன. அவரிடம், ஒரு நாள் என்பது உங்களுடைய ஆயிரம் வருடங்களுக்குச் சமமானதாகும்.