குர்ஆன் 33:23 — அணியினர்
நம்பிக்கையாளர்களில், கடவுள்-உடனான தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்று பவர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலர் மரணமடைந்து விட்டனர், அதே சமயம் மற்றவர்களோ ஒருபோதும் தடுமாறாது, தயாராக நிற்கின்றனர்.
[33:22] உண்மையான நம்பிக்கையாளர்கள் (தாக்கு வதற்குத் தயாரான) படையினரைக் கண்ட பொழுது, அவர்கள், “ இதுதான் கடவுள்-ம் அவருடைய தூதரும் நமக்கு வாக்களித்தது மேலும் கடவுள்-ம் அவருடைய தூதரும் உண்மையாளர்களாகவே இருக்கின்றனர்” என்று கூறினார்கள். இது (ஆபத்தான சூழ்நிலை ) அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவும் மேலும் அவர்களுடைய அடிபணிதலை அதிகரிக் கவும் மட்டுமே செய்தது.
[33:24] அவர்களுடைய உண்மைத்தன்மைக்காக உண்மையாளர்களுக்கு கடவுள் நிச்சயமாகப் பிரதிபலனளிப்பார், மேலும் நயவஞ்சகர்களைத் தண்டிப்பார், அவ்வாறு அவர் நாடினால், அல்லது அவர்களை மீட்டுக் கொள்வார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்