குர்ஆன் 33:4 — அணியினர்
கடவுள் எந்த மனிதருக்கும் அவருடைய நெஞ்சத்தில் இரண்டு இதயங்களைத் தர வில்லை. அன்றியும் (உங்களுடைய சமூக வழக்கத்திற்கேற்ப) நீங்கள் பிணையறுத்துக் கொள்கின்ற உங்கள் மனைவியரை உங்களுடைய தாய்மார்களாக* அவர் மாற்றி விடுவதுமில்லை. அன்றி உங்களுடைய தத்துப்பிள்ளைகளை மரபுவழிச் சந்ததியினராக மாற்றிவிடுவதுமில்லை. இவையெல்லாம் நீங்களே கண்டு பிடித்துக் கொண்ட வெறும் கூற்றுக்களேயாகும். கடவுள் சத்தியத்தையே கூறுகின்றார், மேலும் அவர் (நேரான) பாதையில் வழிநடத்துகின்றார்.
[33:3] மேலும் உமது பொறுப்பைக் கடவுள் மீது வைப் பீராக. ஒரு பொறுப்பாளராகக் கடவுள் போதுமானவர்.
[33:5] உங்களுடைய தத்துப்பிள்ளைகளுக்கு, அவர் களுடைய மரபுவழிப் பெற்றோர்களுடனான அவர்களுடைய உறவைப் பாதுகாக்கும் வண்ணம் நீங்கள் பெயரிட வேண்டும். கடவுள் -ன் பார்வையில் இதுவே மிகவும் நீதமான தாகும். அவர்களுடைய பெற்றோர்களை நீங்கள் அறியாவிட்டால், பின்னர், உங்களு டைய மார்க்கச் சகோதரர்கள் என்ற முறையில், அவர்களை நீங்கள் உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களைப் போல் நடத்திட வேண்டும். இவ்விஷயத்தில் நீங்கள் ஒரு தவறு செய்து விட்டால், நீங்கள் பாவம் ஒன்றைச் செய்து விடவில்லை; வேண்டுமென்றே செய்யப்படும் உங்களுடைய செயல் திட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.