குர்ஆன் 33:3 — அணியினர்
மேலும் உமது பொறுப்பைக் கடவுள் மீது வைப் பீராக. ஒரு பொறுப்பாளராகக் கடவுள் போதுமானவர்.
[33:2] உம்முடைய இரட்சகரிடமிருந்து உமக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றைப் பின்பற்றுவீராக. நீங்கள் அனைவரும் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[33:4] கடவுள் எந்த மனிதருக்கும் அவருடைய நெஞ்சத்தில் இரண்டு இதயங்களைத் தர வில்லை. அன்றியும் (உங்களுடைய சமூக வழக்கத்திற்கேற்ப) நீங்கள் பிணையறுத்துக் கொள்கின்ற உங்கள் மனைவியரை உங்களுடைய தாய்மார்களாக* அவர் மாற்றி விடுவதுமில்லை. அன்றி உங்களுடைய தத்துப்பிள்ளைகளை மரபுவழிச் சந்ததியினராக மாற்றிவிடுவதுமில்லை. இவையெல்லாம் நீங்களே கண்டு பிடித்துக் கொண்ட வெறும் கூற்றுக்களேயாகும். கடவுள் சத்தியத்தையே கூறுகின்றார், மேலும் அவர் (நேரான) பாதையில் வழிநடத்துகின்றார்.