குர்ஆன் 33:54 — அணியினர்
எதையேனும் நீங்கள் அறிவித்தாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும், கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[33:53] நம்பிக்கை கொண்டோரே, உண்ணுவதற்கு உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டாலே அன்றி வேதம் வழங்கப்பட்டவரின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள், அன்றி அத்தகையதொரு அழைப்பை எவ்விதத்திலும் நீங்கள் வலியுறுத்தவும் வேண்டாம். நீங்கள் அழைக்கப்பட்டால், நீங்கள் நுழையலாம். நீங்கள் உண்டு முடித்துவிட்டால், நீங்கள் சென்று விட வேண்டும்; நீண்ட உரையாடல்களில் அவரை ஈடுபடுத்தாதீர்கள். இது வேதம் வழங்கப்பட்டவரைப் புண்படுத்துவதாக இருந்தது, மேலும் உங்களிடம் சொல்வதற்கு அவர் மிகவும் கூச்சப்படுபவராக இருந்தார். ஆனால் கடவுள் உண்மையிலிருந்து கூச்சப்பட்டு விலகி விடுவதில்லை. அவருடைய மனைவியரிடம் நீங்கள் எதையேனும் கேட்டாக வேண்டும் என்றி ருந்தால், ஒரு திரைக்கப்பாலிருந்து அவர்களிடம் கேளுங்கள். உங்களுடைய இதயங்களுக்கும் மேலும் அவர்களுடைய இதயங்களுக்கும் இதுவே தூய்மையானதாகும். நீங்கள் கடவுள்-உடைய தூதரைப் புண்படுத்தக் கூடாது. அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் மணந்து கொள்ள வேண்டாம், ஏனெனில் கடவுள்-ன் பார்வையில் இது மிகப்பெரியதொரு குற்றச் செயலாகும்*.
[33:55] பெண்கள் தங்களுடைய தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்களுடைய சகோதரர்கள், தங்களு டைய சகோதரர்களின் மகன்கள், தங்களுடைய சகோதரிகளுடைய மகன்கள், மற்ற பெண்கள், மற்றும் அவர்களுடைய (பெண்) ஊழியர்கள் முன்னிலையில் (தங்களுடைய ஆடைக் கட்டுப்பாட்டை) தளர்த்திக் கொள்ளலாம். அவர்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும். அனைத்து விஷயங்களுக்கும் கடவுள் சாட்சியாவார்.