குர்ஆன் 33:53 — அணியினர்
يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَدخُلوا بُيوتَ النَّبِىِّ إِلّا أَن يُؤذَنَ لَكُم إِلىٰ طَعامٍ غَيرَ نٰظِرينَ إِنىٰهُ وَلٰكِن إِذا دُعيتُم فَادخُلوا فَإِذا طَعِمتُم فَانتَشِروا وَلا مُستَـٔنِسينَ لِحَديثٍ ۚ إِنَّ ذٰلِكُم كانَ يُؤذِى النَّبِىَّ فَيَستَحيۦ مِنكُم ۖ وَاللَّهُ لا يَستَحيۦ مِنَ الحَقِّ ۚ وَإِذا سَأَلتُموهُنَّ مَتٰعًا فَسـَٔلوهُنَّ مِن وَراءِ حِجابٍ ۚ ذٰلِكُم أَطهَرُ لِقُلوبِكُم وَقُلوبِهِنَّ ۚ وَما كانَ لَكُم أَن تُؤذوا رَسولَ اللَّهِ وَلا أَن تَنكِحوا أَزوٰجَهُ مِن بَعدِهِ أَبَدًا ۚ إِنَّ ذٰلِكُم كانَ عِندَ اللَّهِ عَظيمًا
நம்பிக்கை கொண்டோரே, உண்ணுவதற்கு உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டாலே அன்றி வேதம் வழங்கப்பட்டவரின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள், அன்றி அத்தகையதொரு அழைப்பை எவ்விதத்திலும் நீங்கள் வலியுறுத்தவும் வேண்டாம். நீங்கள் அழைக்கப்பட்டால், நீங்கள் நுழையலாம். நீங்கள் உண்டு முடித்துவிட்டால், நீங்கள் சென்று விட வேண்டும்; நீண்ட உரையாடல்களில் அவரை ஈடுபடுத்தாதீர்கள். இது வேதம் வழங்கப்பட்டவரைப் புண்படுத்துவதாக இருந்தது, மேலும் உங்களிடம் சொல்வதற்கு அவர் மிகவும் கூச்சப்படுபவராக இருந்தார். ஆனால் கடவுள் உண்மையிலிருந்து கூச்சப்பட்டு விலகி விடுவதில்லை. அவருடைய மனைவியரிடம் நீங்கள் எதையேனும் கேட்டாக வேண்டும் என்றி ருந்தால், ஒரு திரைக்கப்பாலிருந்து அவர்களிடம் கேளுங்கள். உங்களுடைய இதயங்களுக்கும் மேலும் அவர்களுடைய இதயங்களுக்கும் இதுவே தூய்மையானதாகும். நீங்கள் கடவுள்-உடைய தூதரைப் புண்படுத்தக் கூடாது. அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் மணந்து கொள்ள வேண்டாம், ஏனெனில் கடவுள்-ன் பார்வையில் இது மிகப்பெரியதொரு குற்றச் செயலாகும்*.
[33:52] உமக்கு விவரிக்கப்பட்ட வகையினருக்கப்பால், வேறு எந்தப் பெண்களையும் திருமணம் செய்து கொள்வதிலிருந்து நீர் தடுக்கப்பட்டுள்ளீர், அன்றியும் (தடை செய்யப்பட்ட வகையினரி லிருந்து) புதியதொரு மனைவியை நீர் மாற்றி அமைத்துக்கொள்ளவும் கூடாது, அவர்களுடைய அழகில் நீர் எவ்வளவு வியந்தபோதிலும் பொருட் டல்ல. ஏற்கெனவே உமக்குச் சட்டபூர்வமாக்கப் பட்டவர்களைக் கொண்டு திருப்தியடைந்தவராக நீர் இருக்க வேண்டும். அனைத்து விஷயங்கள் மீதும் கடவுள் கண்காணிப்பு நிறைந்தவராக உள்ளார்.
[33:54] எதையேனும் நீங்கள் அறிவித்தாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும், கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.