Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:55 — அணியினர்

பெண்கள் தங்களுடைய தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்களுடைய சகோதரர்கள், தங்களு டைய சகோதரர்களின் மகன்கள், தங்களுடைய சகோதரிகளுடைய மகன்கள், மற்ற பெண்கள், மற்றும் அவர்களுடைய (பெண்) ஊழியர்கள் முன்னிலையில் (தங்களுடைய ஆடைக் கட்டுப்பாட்டை) தளர்த்திக் கொள்ளலாம். அவர்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும். அனைத்து விஷயங்களுக்கும் கடவுள் சாட்சியாவார்.

[33:54] எதையேனும் நீங்கள் அறிவித்தாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும், கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[33:56] கடவுள்-ம் அவருடைய வானவர்களும், வேதம் வழங்கப்பட்டவருக்கு உதவியும் மற்றும் ஆதரவும் அளிக்கின்றனர். நம்பிக்கை கொண் டோரே, நீங்கள் அவருக்கு உதவியும் மற்றும் ஆதரவும் அளிக்க வேண்டும், மேலும் எவ்வாறு அவர் மதிக்கப்பட வேண்டுமோ அவ்வாறு அவரை மதிக்கவும் வேண்டும்.*