குர்ஆன் 33:56 — அணியினர்
கடவுள்-ம் அவருடைய வானவர்களும், வேதம் வழங்கப்பட்டவருக்கு உதவியும் மற்றும் ஆதரவும் அளிக்கின்றனர். நம்பிக்கை கொண் டோரே, நீங்கள் அவருக்கு உதவியும் மற்றும் ஆதரவும் அளிக்க வேண்டும், மேலும் எவ்வாறு அவர் மதிக்கப்பட வேண்டுமோ அவ்வாறு அவரை மதிக்கவும் வேண்டும்.*
[33:55] பெண்கள் தங்களுடைய தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்களுடைய சகோதரர்கள், தங்களு டைய சகோதரர்களின் மகன்கள், தங்களுடைய சகோதரிகளுடைய மகன்கள், மற்ற பெண்கள், மற்றும் அவர்களுடைய (பெண்) ஊழியர்கள் முன்னிலையில் (தங்களுடைய ஆடைக் கட்டுப்பாட்டை) தளர்த்திக் கொள்ளலாம். அவர்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும். அனைத்து விஷயங்களுக்கும் கடவுள் சாட்சியாவார்.
[33:57] நிச்சயமாக, எவர்கள் கடவுள்-ஐயும் அவரு டைய தூதரையும் எதிர்க்கின்றனரோ, அவர் களை இவ்வுலகிலும், மறுவுலகிலும் ஒரு சாபத்தைக் கொண்டு கடவுள் துன்புறுத்து கின்றார்; அவர்களுக்காக இழிவு நிறைந்த தொரு தண்டனையை அவர் தயார் செய்து ள்ளார்.