குர்ஆன் 34:12 — ஷீபா
நாம் ஸாலமனுக்கு காற்றை, அவருடைய முடிவின்படி ஒரு மாதம் வந்து கொண்டும் மேலும் ஒரு மாதம் சென்று கொண்டும் பயணிக்குமாறு ஆக்கினோம். மேலும் அவருக்காக ஒரு எண்ணெய் ஊற்றை நாம் பொங்கி வரச் செய்தோம். அத்துடன், அவருடைய இரட்சகரின் அனுமதியின் பேரில், ஜின்கள், அவருக்காக வேலை செய்தன. அவர்களில் எவர் ஒருவர் நமது கட்டளைகளைப் புறக்கணித்தாரோ அவரை, கடுமையானதொரு தண்டனைக்கு நாம் ஆட்படுத்தினோம்.
[34:11] “மிகச் சரியாகப் பொருந்துகின்ற கவசங்களை நீர் செய்து கொள்ளலாம், மேலும் நன்னெறிகள் புரிவீராக. நீர் எதனைச் செய்தாலும், அதனைப் பார்ப்பவராக நான் இருக்கின்றேன்”.
[34:13] அவர் விரும்பிய எந்த ஒன்றையும் அவர்கள் அவருக்காகச் செய்தார்கள்-மாடங்கள், சிலைகள், ஆழமான குளங்கள் மேலும் கனத்த சமையல் பாத்திரங்கள். டேவிட்டின் குடும்பத்தாரே, உங்கள் நன்றியறிதலைக் காட்டுவதற்காக, (நன்னெறி யான) காரியங்கள் செய்யுங்கள். என்னுடைய அடியார்களில் மிகச் சிலர் மட்டுமே நன்றி யுடையவர்களாக இருக்கின்றனர்.