குர்ஆன் 34:13 — ஷீபா
அவர் விரும்பிய எந்த ஒன்றையும் அவர்கள் அவருக்காகச் செய்தார்கள்-மாடங்கள், சிலைகள், ஆழமான குளங்கள் மேலும் கனத்த சமையல் பாத்திரங்கள். டேவிட்டின் குடும்பத்தாரே, உங்கள் நன்றியறிதலைக் காட்டுவதற்காக, (நன்னெறி யான) காரியங்கள் செய்யுங்கள். என்னுடைய அடியார்களில் மிகச் சிலர் மட்டுமே நன்றி யுடையவர்களாக இருக்கின்றனர்.
[34:12] நாம் ஸாலமனுக்கு காற்றை, அவருடைய முடிவின்படி ஒரு மாதம் வந்து கொண்டும் மேலும் ஒரு மாதம் சென்று கொண்டும் பயணிக்குமாறு ஆக்கினோம். மேலும் அவருக்காக ஒரு எண்ணெய் ஊற்றை நாம் பொங்கி வரச் செய்தோம். அத்துடன், அவருடைய இரட்சகரின் அனுமதியின் பேரில், ஜின்கள், அவருக்காக வேலை செய்தன. அவர்களில் எவர் ஒருவர் நமது கட்டளைகளைப் புறக்கணித்தாரோ அவரை, கடுமையானதொரு தண்டனைக்கு நாம் ஆட்படுத்தினோம்.
[34:14] அவருடைய மரணத்திற்கு என்று நிர்ணயிக்கப் பட்ட நேரம் வந்துவிட்ட போது, அவர் மரணித்து விட்டார் என அவர்களுக்குத் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. பிராணிகளில் ஒன்று அவருடைய கைத்தடியைத் தின்ன முயற்சித்து, மேலும் அவர் கீழே சாயும் வரை அறியாதிருந்த அந்த ஜின்கள், அப்போது தான் அவர் மரணித்து விட்டார் என்பதை புரிந்து கொண்டனர். அவர்கள் மெய்யாகவே மறைவானவற்றை அறிந்திருப்பார் களாயின், அவர் மரணித்து விட்டவுடன், அத்தனை கடுமையாக வேலை செய்து கொண்டிருந்ததை நிறுத்தியிருப்பார்கள் என்பதை இவ்விதமாக அவர்கள் புரிந்து கொண்டனர்.