Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:14 — ஷீபா

அவருடைய மரணத்திற்கு என்று நிர்ணயிக்கப் பட்ட நேரம் வந்துவிட்ட போது, அவர் மரணித்து விட்டார் என அவர்களுக்குத் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. பிராணிகளில் ஒன்று அவருடைய கைத்தடியைத் தின்ன முயற்சித்து, மேலும் அவர் கீழே சாயும் வரை அறியாதிருந்த அந்த ஜின்கள், அப்போது தான் அவர் மரணித்து விட்டார் என்பதை புரிந்து கொண்டனர். அவர்கள் மெய்யாகவே மறைவானவற்றை அறிந்திருப்பார் களாயின், அவர் மரணித்து விட்டவுடன், அத்தனை கடுமையாக வேலை செய்து கொண்டிருந்ததை நிறுத்தியிருப்பார்கள் என்பதை இவ்விதமாக அவர்கள் புரிந்து கொண்டனர்.

[34:13] அவர் விரும்பிய எந்த ஒன்றையும் அவர்கள் அவருக்காகச் செய்தார்கள்-மாடங்கள், சிலைகள், ஆழமான குளங்கள் மேலும் கனத்த சமையல் பாத்திரங்கள். டேவிட்டின் குடும்பத்தாரே, உங்கள் நன்றியறிதலைக் காட்டுவதற்காக, (நன்னெறி யான) காரியங்கள் செய்யுங்கள். என்னுடைய அடியார்களில் மிகச் சிலர் மட்டுமே நன்றி யுடையவர்களாக இருக்கின்றனர்.

[34:15] ஷீபாவின் சொந்த நாடு, வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரு சோலைகளுடன் ஓர் அற்புதமாக இருந்து வந்தது. உங்களுடைய இரட்சகரின் வாழ்வாதாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் அவருக்கு நன்றியுடை யவர்களாக இருங்கள்-நல்ல நிலம், மேலும் மன்னிக்கின்ற ஓர் இரட்சகர்.