குர்ஆன் 34:15 — ஷீபா
ஷீபாவின் சொந்த நாடு, வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரு சோலைகளுடன் ஓர் அற்புதமாக இருந்து வந்தது. உங்களுடைய இரட்சகரின் வாழ்வாதாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் அவருக்கு நன்றியுடை யவர்களாக இருங்கள்-நல்ல நிலம், மேலும் மன்னிக்கின்ற ஓர் இரட்சகர்.
[34:14] அவருடைய மரணத்திற்கு என்று நிர்ணயிக்கப் பட்ட நேரம் வந்துவிட்ட போது, அவர் மரணித்து விட்டார் என அவர்களுக்குத் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. பிராணிகளில் ஒன்று அவருடைய கைத்தடியைத் தின்ன முயற்சித்து, மேலும் அவர் கீழே சாயும் வரை அறியாதிருந்த அந்த ஜின்கள், அப்போது தான் அவர் மரணித்து விட்டார் என்பதை புரிந்து கொண்டனர். அவர்கள் மெய்யாகவே மறைவானவற்றை அறிந்திருப்பார் களாயின், அவர் மரணித்து விட்டவுடன், அத்தனை கடுமையாக வேலை செய்து கொண்டிருந்ததை நிறுத்தியிருப்பார்கள் என்பதை இவ்விதமாக அவர்கள் புரிந்து கொண்டனர்.
[34:16] அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர், மேலும் அதன் விளைவாக, பேரழிவானதொரு வெள்ளத்தை அவர்கள் மீது நாம் ஊற்றினோம், மேலும் அவர்களுடைய இரு தோட்டங்களையும், கெட்ட சுவை கொண்ட கனிகளையும், முட்செடிக ளையும் மேலும் பற்றாக்குறை மகசூலையும் கொண்ட இரு தோட்டங்களாக நாம் மாற்றியமைத்தோம்.