குர்ஆன் 36:20 — ய.ஸீ.
அந்நகரத்தின் மறுகோடியிலிருந்து “என் சமூகத்தாரே, இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” எனக் கூறியவராக ஒரு மனிதர் வந்தார்.
[36:19] அவர்கள், “இப்போது நீங்கள் நினைவூட்டப்பட்டவர் களாகி விட்டதனால், உங்களுடைய சகுனம் உங்களுடைய மறுமொழியைச் சார்ந்ததாகவே உள்ளது. உண்மையில், நீங்கள் வரம்பு மீறுகின்ற மக்களாகவே இருக்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.
[36:21] “உங்களிடம் கூலி எதுவும் கேட்காதவர்களை, மேலும் வழிகாட்டப்பட்டவர்களாக இருப்பவர் களைப் பின்பற்றுங்கள்.