குர்ஆன் 36:78 — ய.ஸீ.
தனது முதல் படைப்பை மறந்த நிலையில்-“எலும்புகளை, அவை மக்கிப்போன பின்னர் எவரால் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்ப இயலும்?” என அவன் நம்மிடம் கேள்வி எழுப்புகின்றான்.
[36:77] ஒரு சிறு துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம், பின்னர் அவன் தீவிரமானதொரு விரோதியாக மாறி விடுகின்றான் என்பதை மனிதன் காணவில்லையா?
[36:79] “முதல்முறை அவர்களைத் துவக்கியவரே அவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புவார். ஒவ்வொரு படைப்பையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.