குர்ஆன் 36:79 — ய.ஸீ.
“முதல்முறை அவர்களைத் துவக்கியவரே அவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புவார். ஒவ்வொரு படைப்பையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.
[36:78] தனது முதல் படைப்பை மறந்த நிலையில்-“எலும்புகளை, அவை மக்கிப்போன பின்னர் எவரால் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்ப இயலும்?” என அவன் நம்மிடம் கேள்வி எழுப்புகின்றான்.
[36:80] அவர்தான் பசுமையான மரங்களிலிருந்து, விளக்கிற்காக நீங்கள் எரிக்கின்ற எரி பொருளைப் படைப்பவர்.