குர்ஆன் 38:26 — ஸ
டேவிட்டே, உம்மை நாம் பூமியின் மீது ஓர் ஆட்சியாளராக ஆக்கியுள்ளோம். ஆகையால், மக்களுக்கிடையில் நீர் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும், மேலும் கடவுள்-ன் பாதையிலிருந்து உம்மை திசை திருப்பி விடாதிருக்கும் பொருட்டு, உம்முடைய சுய அபிப்பிராயங்களைப் பின்பற்றாதீர். நிச்சயமாக, கடவுள்-ன் பாதையிலிருந்து வழிதவறிச் செல்பவர்கள், கேள்விக் கணக்கு நாளை மறந்தமைக்காக கடுமையான தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
[38:25] நாம் அவரை இந்த விஷயத்தில் மன்னித்தோம். நம்மிடம் கண்ணியமானதொரு அந்தஸ்தையும், மேலும் அழகியதொரு தங்குமிடத்தையும் நாம் அவருக்கு அளித்தோம்.
[38:27] வானத்தையும், மற்றும் பூமியையும் மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், வீணிற்காக நாம் படைக்கவில்லை. இத்தகைய நினைப்பானது நம்ப மறுப்பவர்களுடைய தேயாகும். ஆகையால், நம்பமறுப்பவர் களுக்குக் கேடுதான்; அவர்கள் நரகத்தில் துன்புறுவார்கள்.