குர்ஆன் 38:25 — ஸ
நாம் அவரை இந்த விஷயத்தில் மன்னித்தோம். நம்மிடம் கண்ணியமானதொரு அந்தஸ்தையும், மேலும் அழகியதொரு தங்குமிடத்தையும் நாம் அவருக்கு அளித்தோம்.
[38:24] அவர், “உம்முடைய ஆட்டை அவருடையதுடன் சேர்த்துவிடும்படி கேட்டதன் மூலம் அவர் உம்மிடம் நியாயமற்றவராக இருக்கின்றார். தங்களுடைய சொத்துக்களை ஒன்றிணை த்துக் கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் ஒருவரையொருவர் அநியாயமாக நடத்திக் கொள்கின்றனர், நம்பிக்கை கொண்டு நன்னெறிகள் புரிபவர்களைத் தவிர, மேலும் இத்தகையவர்கள் மிகச் சிலரே” என்று கூறினார். அதன் பின்னர், டேவிட் தான் சரியான தீர்ப்பைத்தான் அளித்தோமா என அறிய ஆவல் கொண்டார். நாம் அவரைச் சோதிக்கின்றோம் என்று அவர் எண்ணினார். அவர் பின்னர் தன் இரட்சகரிடம் பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சிப் பிரார்த்தித்தார், குனிந்து விழுந்தார், மேலும் வருந்தித்திருந்தினார்.*
[38:26] டேவிட்டே, உம்மை நாம் பூமியின் மீது ஓர் ஆட்சியாளராக ஆக்கியுள்ளோம். ஆகையால், மக்களுக்கிடையில் நீர் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும், மேலும் கடவுள்-ன் பாதையிலிருந்து உம்மை திசை திருப்பி விடாதிருக்கும் பொருட்டு, உம்முடைய சுய அபிப்பிராயங்களைப் பின்பற்றாதீர். நிச்சயமாக, கடவுள்-ன் பாதையிலிருந்து வழிதவறிச் செல்பவர்கள், கேள்விக் கணக்கு நாளை மறந்தமைக்காக கடுமையான தண்டனைக்கு உள்ளாகின்றனர்.