குர்ஆன் 38:75 — ஸ
அவர், “சாத்தானே, என் கரங்களைக் கொண்டு நான் படைத்ததற்கு முன் சிரம்பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது? நீ மிகவும் ஆணவம் கொண்டு விட்டாயா? நீ கலகம் செய்கின்றாயா?” என்று கூறினார்.
[38:74] சாத்தானைத் தவிர; அவன் மறுத்து விட்டான், மேலும் மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், நன்றி கெட்டவனாகவும் இருந்தான்.
[38:76] அவன், “நான் அவரை விடவும் மேலானவன்; என்னை நீர் நெருப்பிலிருந்து படைத்தீர், மேலும் அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தீர்” என்று கூறினான்.