குர்ஆன் 39:10 — மக்கள் கூட்டங்கள்
“நம்பிக்கை கொண்ட என் அடியார்களே, உங்கள் இரட்சகரிடம் நீங்கள் பயபக்தி யோடிருக்க வேண்டும்” என்று கூறுவீராக. ஏனெனில் இவ்வுலகில் நன்னெறிகள் புரிந்தவர்களுக்கு, நல்லதொரு வெகுமதி. கடவுள்-ன் பூமி விசாலமானது, மேலும் உறுதிப்பாட்டுடன் விடாமுயற்சி செய்பவர்கள், எல்லைகளின்றி, தாராளமாகத் தங்களுடைய பிரதிபலனைப் பெற்றுக் கொள்வார்கள்.
[39:9] தங்களுடைய இரட்சகரின் கருணையைத் தேடியவாறு, மறுவுலகைக் குறித்து விழிப்புடன் இருந்த வண்ணம், சிரம் பணிந்தும் மேலும் நின்ற நிலையிலும், இரவில் தியானம் செய்பவர் களில் ஒருவராக இருப்பது மேலானதல்லவா? “அறிந்திருப்பவர்கள் அறியாதிருப்பவர்க ளுக்குச் சமமாவார்களா?” என்று கூறுவீராக. அறிவுத்திறனைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.
[39:11] கூறுவீராக,“மார்க்கத்தை முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவாறு, அவரை வழிபட வேண்டுமென கட்டளையிடப்பட்டவராக நான் இருக்கின்றேன்.