Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:9 — மக்கள் கூட்டங்கள்

தங்களுடைய இரட்சகரின் கருணையைத் தேடியவாறு, மறுவுலகைக் குறித்து விழிப்புடன் இருந்த வண்ணம், சிரம் பணிந்தும் மேலும் நின்ற நிலையிலும், இரவில் தியானம் செய்பவர் களில் ஒருவராக இருப்பது மேலானதல்லவா? “அறிந்திருப்பவர்கள் அறியாதிருப்பவர்க ளுக்குச் சமமாவார்களா?” என்று கூறுவீராக. அறிவுத்திறனைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

[39:8] மனிதன் ஏதேனும் துன்பத்திற்குள்ளானால், கபடமின்றி அவருக்கு அர்ப்பணித்துக் கொண் டவனாக, அவன் தன் இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றான். ஆனால் அவர் அவனுக்கு அருள்பாலித்தவுடன், அவன் முன்னர் இறைஞ் சிப் பிரார்த்தித்ததை மறந்தவனாக, கடவுள்-க்குச் சமமாக்குவதற்காகவும், மற்றவர்களை அவருடைய பாதையிலிருந்து திருப்புவதற் காகவும் அவன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றான். “உங்களுடைய நம்பிக்கையின்மையை தற்காலிகமாக அனுபவியுங்கள்; நீங்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டீர்கள்” என்று கூறுவீராக.

[39:10] “நம்பிக்கை கொண்ட என் அடியார்களே, உங்கள் இரட்சகரிடம் நீங்கள் பயபக்தி யோடிருக்க வேண்டும்” என்று கூறுவீராக. ஏனெனில் இவ்வுலகில் நன்னெறிகள் புரிந்தவர்களுக்கு, நல்லதொரு வெகுமதி. கடவுள்-ன் பூமி விசாலமானது, மேலும் உறுதிப்பாட்டுடன் விடாமுயற்சி செய்பவர்கள், எல்லைகளின்றி, தாராளமாகத் தங்களுடைய பிரதிபலனைப் பெற்றுக் கொள்வார்கள்.