குர்ஆன் 39:8 — மக்கள் கூட்டங்கள்
மனிதன் ஏதேனும் துன்பத்திற்குள்ளானால், கபடமின்றி அவருக்கு அர்ப்பணித்துக் கொண் டவனாக, அவன் தன் இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றான். ஆனால் அவர் அவனுக்கு அருள்பாலித்தவுடன், அவன் முன்னர் இறைஞ் சிப் பிரார்த்தித்ததை மறந்தவனாக, கடவுள்-க்குச் சமமாக்குவதற்காகவும், மற்றவர்களை அவருடைய பாதையிலிருந்து திருப்புவதற் காகவும் அவன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றான். “உங்களுடைய நம்பிக்கையின்மையை தற்காலிகமாக அனுபவியுங்கள்; நீங்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டீர்கள்” என்று கூறுவீராக.
[39:7] நீங்கள் நம்ப மறுத்தால், கடவுள் எவரொரு வருடைய தேவையும் இல்லாதவர். ஆனால் தன் அடியார்கள் தவறான முடிவெடுப்பதைக் காண அவர் விரும்புவதில்லை. நன்றியுடையவராக இருக்க நீங்கள் முடிவெடுத்தால், அவர் உங்கள் பால் திருப்தி கொள்கின்றார். எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவின் பாவங்களைச் சுமப் பதில்லை. இறுதியாக, உங்கள் இரட்சகரிடமே உங்களுடைய திரும்புதல் இருக்கின்றது, பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் பற்றி உங்களுக்கு அவர் அறிவிப்பார். ஆழ்மனதின் எண்ணங்களை அவர் முற்றிலும் அறிந்திருக் கின்றார்.
[39:9] தங்களுடைய இரட்சகரின் கருணையைத் தேடியவாறு, மறுவுலகைக் குறித்து விழிப்புடன் இருந்த வண்ணம், சிரம் பணிந்தும் மேலும் நின்ற நிலையிலும், இரவில் தியானம் செய்பவர் களில் ஒருவராக இருப்பது மேலானதல்லவா? “அறிந்திருப்பவர்கள் அறியாதிருப்பவர்க ளுக்குச் சமமாவார்களா?” என்று கூறுவீராக. அறிவுத்திறனைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.