Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:7 — மக்கள் கூட்டங்கள்

நீங்கள் நம்ப மறுத்தால், கடவுள் எவரொரு வருடைய தேவையும் இல்லாதவர். ஆனால் தன் அடியார்கள் தவறான முடிவெடுப்பதைக் காண அவர் விரும்புவதில்லை. நன்றியுடையவராக இருக்க நீங்கள் முடிவெடுத்தால், அவர் உங்கள் பால் திருப்தி கொள்கின்றார். எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவின் பாவங்களைச் சுமப் பதில்லை. இறுதியாக, உங்கள் இரட்சகரிடமே உங்களுடைய திரும்புதல் இருக்கின்றது, பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் பற்றி உங்களுக்கு அவர் அறிவிப்பார். ஆழ்மனதின் எண்ணங்களை அவர் முற்றிலும் அறிந்திருக் கின்றார்.

[39:6] ஒரு மனிதரிலிருந்து அவர் உங்களைப் படைத்தார், பின்னர் அவரிலிருந்து அவருடைய ஜோடியைப் படைத்தார். அவர் எட்டு வகைக் கால்நடைகளை உங்களுக்கு இறக்கி அனுப்பினார். அவர் படைப்பிற்குப் பின் படைப் பாக, இருள் நிறைந்த மூன்று காலக் கட்டங்களில், உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் உங்களைப் படைத்தார். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அனைத்து ஆட்சியதிகாரமும் அவருக்குரியது. அவருடன் வேறு தெய்வம் இல்லை. எவ்வாறு நீங்கள் வழி தவறிச் செல்ல இயலும்?

[39:8] மனிதன் ஏதேனும் துன்பத்திற்குள்ளானால், கபடமின்றி அவருக்கு அர்ப்பணித்துக் கொண் டவனாக, அவன் தன் இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றான். ஆனால் அவர் அவனுக்கு அருள்பாலித்தவுடன், அவன் முன்னர் இறைஞ் சிப் பிரார்த்தித்ததை மறந்தவனாக, கடவுள்-க்குச் சமமாக்குவதற்காகவும், மற்றவர்களை அவருடைய பாதையிலிருந்து திருப்புவதற் காகவும் அவன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றான். “உங்களுடைய நம்பிக்கையின்மையை தற்காலிகமாக அனுபவியுங்கள்; நீங்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டீர்கள்” என்று கூறுவீராக.