குர்ஆன் 39:36 — மக்கள் கூட்டங்கள்
தன்னுடைய அடியார்களுக்குக் கடவுள் போதுமானவர் அல்லவா? அவருடன் அவர்கள் அமைத்துக் கொள்கின்ற இணைத் தெய்வங்களைக் கொண்டு உம்மை அவர்கள் அச்சுறுத்துகின்றனர். கடவுள் எவரை வழிகேட்டில் அனுப்பி விடுகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிநடத்த முடியாது.
[39:35] அவர்களுடைய பாவகரமான காரியங்களைக் கடவுள் மன்னிக்கின்றார், மேலும் அவர் களுடைய நற்காரியங்களுக்காக அவர் களுக்குத் தாராளமாக வெகுமதியளிக் கின்றார்.
[39:37] மேலும் கடவுள் எவரை வழிநடத்துகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிகேட்டிற்கு அனுப்பி விட முடியாது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர் அல்லவா?