Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:37 — மக்கள் கூட்டங்கள்

மேலும் கடவுள் எவரை வழிநடத்துகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிகேட்டிற்கு அனுப்பி விட முடியாது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர் அல்லவா?

[39:36] தன்னுடைய அடியார்களுக்குக் கடவுள் போதுமானவர் அல்லவா? அவருடன் அவர்கள் அமைத்துக் கொள்கின்ற இணைத் தெய்வங்களைக் கொண்டு உம்மை அவர்கள் அச்சுறுத்துகின்றனர். கடவுள் எவரை வழிகேட்டில் அனுப்பி விடுகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிநடத்த முடியாது.

[39:38] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவர் யார்?” என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், “கடவுள்” என்றே அவர்கள் கூறுவார்கள். “பின்னர் ஏன் நீங்கள் கடவுள்-உடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றீர்கள்? கடவுள் எனக்கு ஏதேனும் துன்பத்தை நாடினால், அத்தகையதொரு துன்பத்தை விடுவிக்க அவர்களால் இயலுமா? மேலும் அவர் எனக்கு ஓர் அருட்கொடையை நாடினால், அத்தகையதோர் அருட்கொடையை அவர்களால் தடுத்து விட இயலுமா? என்று கூறுவீராக, “கடவுள் எனக்குப் போதுமானவர்” என்று கூறுவீராக. பொறுப்பேற்படுத்துபவர்கள் அவர் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.